புயலால் பாதித்த கிராமத்தை தத்தெடுப்பேன்… நடிகர் விஷால்

சென்னை:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்து முன் மாதிரி கிராமமாக மாற்றுவேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது;
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன். தத்தெடுக்க உள்ள கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!