புலிகளை தத்தெடுத்த விஜய் சேதுபதி

வண்டலூர்  வனவிலங்கு பூங்காவிலிருக்கும் இரண்டு புலிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுதுள்ளார்.

சென்னை வண்டலூரில் அமைந்துள்ள‌து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இப்பூங்காவில் விலங்குகளை தத்தெடுக்கும்  நிகழ்ச்சி 2010லிருந்து நடைமுறையில் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கடந்த வருடங்களில் நடிகர்கள் பலர் வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து, அவ்விலங்குகளுக்கான பராமரிப்பு தொகையினை வழங்கினர். அதன்படி நடிகர்கள் சூர்யா, கார்த்திக், சிவ கார்த்திகேயன் உள்ளிட்டோர் விலங்குகளை தத்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி  சமீபத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆதித்யா, மற்றும் ஆர்த்தி என பெயரிடப்படுள்ள இரண்டு புலிகளை தத்தெடுத்துள்ளார்.  மேலும் இப்புலிகளை 6 மாத காலத்திற்கு பராமரிப்பதற்கான ரூபாய்  5 லட்சத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவை பராமரிக்கும் அதிகாரிகளிடம் வழங்கியுள்ளார்.

Sharing is caring!