புலிக்கு பிறந்தது பூனையாகுமா? வைரலாகும் நா.முத்துக்குமார் மகன் எழுதிய வரிகள்!

தென்னிந்திய சினிமாவின் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

அவரின் கவி வரிகளில் உருவான பாடல்களால் இன்னும் அவர் வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றார்.

இவர் சுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியுள்ளார்.

தங்க மீன்கள், சைவம் ஆகிய படங்களில் பாடல் எழுதியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற கவிஞர் நா.முத்துக்குமார், மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த அவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல், அவரது மகன் ஆதவன் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு எழுதிய கவிதைகள் தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Sharing is caring!