புலி முருகன் படம் நாடு கடந்து சில சாதனைகள்

மோகன்லால் நடித்த புலி முருகன் படம் நாடு கடந்து சில சாதனைகளை புதிதாக செய்தது, சில சாதனைகள முறியடித்தது. அதேபோல தற்போது மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஒடியன்’ படம், பட்ஜெட் வெளியாகும் தியேட்டர் எண்ணிக்கை, ரசிகர்மன்ற காட்சிகளின் எண்ணிக்கை என இப்போதே சில சாதனைகளை படைக்க தொடங்கியுள்ளது.

ஜெர்மனியில் வெளியான மலையாள படங்களுக்கு இதுவரை ரசிகர்மன்ற காட்சி நடைபெற்றதில்லை. ஆனால் புலி முருகன் படம் மூலம் மோகன்லால் அங்கே பாப்புலராகி விட்டதால் தற்போது ஒடியன் படத்திற்கு முதன்முதலாக ரசிகர்மன்ற சிறப்பு காட்சியை திரையிட இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல இதுவரை மோகன்லால் படம் வெளியாகாத சில நாடுகளிலும் ‘ஒடியன்’ திரையிடப்பட இருக்கிறதாம்

Sharing is caring!