புஸ்வாணம் ஆன நம்பிக்கை… பிரியா வாரியார் கனவு தகர்ந்தது

ஐதராபாத்:
போச்சே… போச்சே… வடை போச்சே என்ற ரீதியில் தவித்து வருகிறார் பிரியா வாரியார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாளில் இந்திய அளவில் புகழின் உச்சிக்கே சென்றவர் பிரியா வாரியர். அவர் நடித்த ஒரு அடர் லவ் படத்தின் பாடல் டீஸர் வெளியாகி அவரை வைரலாக்கியது.

அந்த வரவேற்பை பார்த்து அந்த படத்தினை தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப் செய்து காதலர் தினத்திற்கு வெளியிட்டனர். ஆனால் படம் மிக மோசமான ரெஸ்பான்ஸ் பெற்றுவருகிறது. டப்பிங் செய்து வெளியிட்ட இடங்களிலும் வசூல்ன்னா… என்ன என்று கேட்கும் அளவிற்கு உள்ளதாம்.

இந்த படம் பெரிய வெற்றி பெரும், இனி சம்பளம் 1 கோடி வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் பேசி நயன்தாரா ரேஞ்சுக்கு பிளான் வைத்திருந்த பிரியா வாரியாரின் கனவு புஸ்…ஸ்… என்று உடைந்துள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!