பெங்களூருவில் ஒரு வரவேற்பும், மும்பையில் ஒரு வரவேற்பும்

பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி, சில நாட்களுக்கு முன்னர் தம்பதிகளாக மாறினர். இவர்களது, திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் மிக பிரம்மாண்டமாய் நடந்தது. கொங்கனி மற்றும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த இருநாட்களுக்கு பிறகே மணமக்களின் போட்டோ வெளியாகின. அந்தளவுக்கு யாரும் போட்டா எடுக்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்போடு திருமணம் நடந்தது.

இந்நிலையில் தீபிகா, ரன்வீர் திருமணம் முடிந்து இந்தியா திரும்பி உள்ளனர். விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தப்படியாக திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. பெங்களூருவில் ஒரு வரவேற்பும், மும்பையில் ஒரு வரவேற்பும் நடைபெற இருக்கின்றன.

Sharing is caring!