பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி சித்திரமே சொல்லடி

எம்.ஜி.எம் புரொடக்ஷன் சார்பில் கவுரி சங்கர் தயாரித்து, இயக்கி உள்ள படம் சித்திரமே சொல்லடி. கூல் சுரேஷ், ஹீரோயின். கோபிகா நாயர், கமலி ரமேஷ்குமார், ஸ்ரீ கமலி என 3 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆதிஷ் உத்திரியன் இசை அமைத்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கவுரி சங்கர் கூறியதாவது:

இந்த படம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம். பெண்கள் பாலியல் தொல்லைகளிலிருந்தும், தங்களை கேலி செய்பவர்களிடமிருந்தும் தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் இப்படம் உணர்த்தும். பாலியல் குற்றம் தொடர்புடைய படம் என்பதால் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். துப்பறியும் பாணியில் உருவாக்கபட்டுள்ள இப்படம் சென்னை, ஏலகிரி மற்றும் பாண்டிசேரி ஆகிய பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது. நவம்பர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். என்றார்.

Sharing is caring!