பெண்கள் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் கரீனா கபூர்

இப்போதெல்லாம் சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறார் கரீனா கபூர். குறிப்பாக, பெண்கள் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றை எதிர்த்து, ஆவேசமாக குரல் கொடுக்க துவங்கியுள்ளார்.

சமீபத்தில், மும்பையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற அவர், ‘பெண்கள், தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கியமாக, பெண்கள், எதற்கும் பயப்படக் கூடாது’ என, பேசினார்.’நானும், முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் பயப்படும் பெண் தான். ஆனால், திருமணத்துக்கு பின், ரொம்பவே மாறி விட்டேன்.

என்னை, மிகப்பெரிய பிரபலமாகவோ, ஒரு தேவதையாகவோ, எப்போதுமே நினைத்தது இல்லை. சாதாரண பெண்ணாகவே நினைக்கிறேன். சாதாரண பெண்ணாகவே வாழ்கிறேன்’ என்றும், அவர் பேசினார்.

‘கரீனா கபூருக்கு, 37 வயதாகி விட்டது. அதனால், படிப்படியாக சினிமாவில் இருந்து விலகி, சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார். இதன் வெளிப்பாடு தான், கரீனாவின் சமீபத்திய செயல்பாடுகள்’ என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.

Sharing is caring!