பெண் காவலர்களின் வாழ்க்கை படம்

பெண் காவலர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் மிக மிக அவசரம். அமைதிப்படை 2, கங்காரு படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி இயக்கி உள்ளார். ஸ்ரீபிரியங்கா, பெண் காவலராக நடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்பாக படத்தை 200 பெண் காவலர்களுக்கு சிறப்பு காட்சியாக திரையிட்டு காட்டினார் சுரேஷ் காமாட்சி. இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தப்படம் பெண் காவலர்களின் அவலங்களைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. பெண் போலீசார் மட்டுமே சந்திக்கும் பிரச்சனைகளை சொல்லும் படம் என்பது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. அனைத்து துறையிலும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை சொல்லும் கதை தான். அந்தவகையில் இந்தப்படத்தின் கதைக்களமாக போலீஸ் துறையை பின்னணியில் வைத்துள்ளோம்.

இந்தப் படத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். முதல்வரின் பரிந்துரையின் பேரில் கமிஷனரும் அவரின் கீழ் உள்ள உயரிதிகாரிகளும் படம் பார்த்தனர் அதன்பின் சுமார் 2௦௦ பெண் காவலர்களுக்கு இந்தப்படத்தை திரையிட்டு காட்ட அனுமதித்தார் என்கிறார் சுரேஷ் காமாட்சி.

Sharing is caring!