பேட்ட இறுதிகட்ட பணிகள்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.

நவம்பர் 29-ந்தேதி ரஜினியின் 2.0 திரைக்கு வரும் நிலையில், அதையடுத்து பேட்ட வெளியாக உள்ளது. மேலும், இந்த படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது.

அரசியல் கதையில் உருவாகும் அந்த படம் குறித்து ரஜினியும், முருகதாசும் ஏற்கனவே பேசி உள்ளனர். இந்நிலையில், 2019 ஜனவரியில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

Sharing is caring!