‘பேட்ட’ டீசர் வெளியீடு ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12

இளம் இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கிய ‘கபாலி, காலா’ படங்களுக்குப் பிறகு மீண்டும் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கும் படம் ‘பேட்ட’.

இப்படத்தின் டீசர் வெளியீடு ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் இசை வெளியீட்டை டிசம்பர் 16ம் தேதி நடித்த உள்ளார்களாம். ‘சர்கார்’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘பேட்ட’ இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாம்.

படத்தில் ரஜினிகாந்த் தவிர, விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன் என பல முக்கிய நட்சத்திரங்கள் இருப்பதால் அந்த நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பினால் படத்திற்கான பிரமோஷன் அதிகமாக இருக்கும் என்றும் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் இருக்கும் என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Sharing is caring!