பேட்ட படத்தின் அடுத்த சிங்கிள் டிராக் வெளியாகி கலக்குது!

சென்னை:
கலக்குது… கலக்கி எடுத்து வருகிறது பேட்ட படத்தின் அடுத்த சிங்கிள் ட்ராக் உல்லாலா.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் இருந்து உல்லாலா பாடல் வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட.  வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார் என பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

பேட்ட படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தில் மரணமாஸ் என்ற பர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி  பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது இரண்டாவது சிங்கிளாக உல்லாலா பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!