பேட்ட படத்தின் முக்கிய பகுதி விநியோக உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின்

சென்னை:
பேட்ட படத்தின் முக்கிய பகுதிகளின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி உள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பேட்ட படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு தான் என உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் உரிமைகள் விற்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

தற்போது முக்கிய பகுதிகளின் விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

இதை உதயநிதி ஸ்டாலினே டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!