பேட்ட படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றி மாலிக் ஸ்ட்ரீம்

சென்னை:
பேட்ட படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் பெற்றுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் பேட்ட வியாபாரம் தற்போது தொடங்கிவிட்டது, இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் தான் கபாலி, தெறி, பிச்சைக்காரன் ஆகிய படங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவுள்ள அடங்கமறு படத்தையும் இவர்கள் தான் வெளியிட உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!