பேட்ட படத்தின் 2வது சிங்கிள் டிராக் இன்று வெளியாகிறது

சென்னை:
பேட்ட படத்தின் மரண மாஸ் பீவரே  இன்னும் குறையாத நிலையில் 2வது சிங்கிள் டிராக் உல்லாலா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்துள்ள பேட்ட படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு பேட்ட படத்தில் இருந்து மரண மாஸ் பாடல் வெளியாகி பயங்கர ஹிட்டானது. மெட்ராஸ் தமிழில் அனிருத் வெளுத்து இருப்பார். இதுபோல் ஒடிசா இசைக்கலைஞர்கள் மரண மாஸாக இசையமைத்திருப்பார்கள்.  சிறு குழந்தைகளை போல் மரண மாஸ் பாட்டை கேட்டவுடன் ஒரு குத்து நடனத்தை எல்லோருமே போடுகிறார்கள். அந்த அளவுக்கு மரண மாஸ் வெயிட்டாக வந்துள்ளது.

இதையடுத்து இரண்டாவது சிங்கிள் டிராக் உல்லாலா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் சூப்பர் நடனம் போட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!