பேட்ட படத்தின் 2வது லுக்… டிரெண்டிங்கில் முதல்இடம்

சென்னை:
பேட்ட படத்தின் 2வது லுக் வெளியாகி செம டிரெண்டிங் அடித்து முதல் இடம் பிடித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் வட இந்தியா, மதுரை என பரபரப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் அப்படத்தின் 2 வது லுக் தற்போது வெளியாகியுள்ளது. ட்விட்டரில் வந்த சில மணிநேரத்திலேயே டாப் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். சென்னையிலும் சில காட்சிகள் செட் போட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!