பேட்ட படத்திற்கு முன்பே கமலுடன் நடித்த நவாஸுதீன்

சென்னை:
பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக் ஏற்கனவே கமலுடன் தமிழ் படத்தில் நடித்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் நவாஸுதின் சித்திக். எப்போதும் தரமான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர்.
இவர் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால், இவர் பல வருடங்களுக்கு முன்பே தமிழில் அறிமுகமாகியுள்ளார். கமல் இயக்கிய ஹேராம் படத்தில் ஒரு  காட்சியில் நவாஸுதின் நடித்திருந்தாராம். ஆனால், அந்த காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாம்., அது மட்டுமின்றி ஆளவந்தான் படத்திலும் கமலுடன் பணியாற்றினாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!