பேட்ட படத்திற்கு யுஏ சான்றிதழ்… தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

சென்னை:
பேட்ட படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் என விளம்பரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அதன் சென்சார் பணிகள் முடிந்துள்ளது.

படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பொங்கலுக்கு பராக் என ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ள பேட்ட படத்தில் ரஜினி, சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

நன்றி– பத்மா மகன்திருச்சி

Sharing is caring!