பேட்ட படத்தை அதிக தியயேட்டர்களில் வெளியிட்டு கணிசமான லாபத்தை அள்ளிவிடலாம்

ஷங்கர் இயக்கத்தில் நடித்த 2.0 படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார் ரஜினி. ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக உறுதியான செய்திகள் வெளியாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ‘பேட்ட’ படத்தின் இறுதிகட்ட பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளன. இந்தப் படத்தின் சில தமிழக ஏரியாக்களின் விநியோக உரிமையை உதயநிதியின் ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ நிறுவனம் வாங்கியுள்ளது.

பொங்கல் அன்று விஸ்வாசம் படமும் வெளியாவதால் தியேட்டர்களை புக் பண்ணுவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே உதயநிதி வாங்கிய ஏரியாக்களில் உள்ள தியேட்டர் அதிபர்களுக்கு அவரே போன் செய்து பேட்ட படத்துக்கு தியேட்டர் கொடுக்கும்படி கேட்கிறாராம்.

உதயநிதியே போன் செய்து பேசுவதால் தியேட்டர் அதிபர்கள் மறுக்காமல் கண்டிப்பாக தியேட்டர் தருவதாக சொல்கிறார்களாம். எனவே பேட்ட படத்தை அதிக தியயேட்டர்களில் வெளியிட்டு கணிசமான லாபத்தை அள்ளிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் உதயநிதி.

Sharing is caring!