பேட்ட படத்தை பார்த்து செம டான்ஸ் ஆடியுள்ள தனுஷ் – திரிஷா

சென்னை:
பேட்ட படத்தை பார்த்து செம ஆட்டம் போட்டுள்ளனர் தனுசும், திரிஷாவும். இந்த வீடியோதான் தற்போது செம வைரலாகி வருகிறது.

பேட்ட படம் திரைக்கு வந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரஜினியை அதே மாஸான ஸ்டைலில் பார்த்த மகிழ்ச்சியில் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த படத்தை காண ரஜினி குடும்பம் மற்றும் தனுஷ்-த்ரிஷா ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்த்துள்ளனர்.

ரஜினி என்ட்ரி, மரண மாஸ் பாடல் ஆகியவற்றிற்கு தனுஷ் மற்றும் த்ரிஷா எழுந்து கத்தியதோடு, டான்ஸ்சும் ஆடி உள்ளனர். அந்த புகைபடங்களை மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!