பேட்ட படம் செம படம்… விஜய் சேதுபதி பெருமிதம்

சென்னை:
செம படம் பேட்ட… ரஜினியுடன் நான் நடித்த அந்த நிமிடங்கள் எனக்கே சொந்தம் என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி சினிமாவில் சாதிக்க கஷ்டங்கள் அனுபவித்தாலும் தன்னுடைய உழைப்பின் மூலம் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்.
நாயகன் என்றால் இப்படிதான் நடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல் கதை வித்தியாசமாக இருக்கிறதா, நான் நடிக்கிறேன் என்று பல படங்கள் நடிக்கிறார்.

இப்போது கூட அவரின் சீதக்காதி படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்நிலையில் விஜய் சேதுபதி பேட்ட படம் கூறியிருப்பதாவது:

பேட்ட படம் செம படம், அதில் எந்த சந்தேகமும் இல்லை, டப்பிங் முடித்துவிட்டேன், கதை தெரியும், கார்த்திக் முன்பே கூறிவிட்டார். படத்தை தாண்டி ரஜினி அவர்களுடன் நான் நடித்த அந்த நிமிடங்கள் எனக்கு சொந்தமானது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!