பேட்ட படம் பொங்கலுக்கு உறுதி… விஸ்வாசம் டீமும் பணிகளில் தீவிரம்

சென்னை:
பேட்ட பொங்கலுக்கு வருவது மீண்டும் உறுதியாகி உள்ளது. இதற்கிடையில் விஸ்வாசம் படக்குழுவும் திரையரங்குகளை புக் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

வரும் பொங்கலுக்கு ரஜினியின் பேட்ட அஜித்தின் விஸ்வாசம் படம் மோத உள்ளன. இதனால் விநியோகஸ்தர்களிடையே எந்த படத்தை வாங்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் வியோகஸ்தர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை முற்றுக்கையிட ஆரம்பித்தனர்.

தயாரிப்பாளர் சங்கமும் பேட்ட படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸிடம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிபோக முடியுமா என கேட்டதற்கு பேட்ட பொங்கல் வெளியீடு உறுதி என திட்டவட்டமாக கூறிவிட்டனராம். இதனால் தயாரிப்பாளர் சங்கம் பொங்கல் வெளியீட்டு படங்களை தீர்மானிப்பதில் இருந்து விலகி கொண்டது.

இந்நிலையில் பேட்ட படக்குழு தனது படத்திலிருந்து 2 பாடல்கள், டிச.9ல் இசை வெளியீடு, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் என வேகமாக விளம்பரப்படுத்தி கொண்டு வந்தாலும் விஸ்வாசத்தின் தமிழக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டுடியோ எந்தவொரு ஆர்பாட்டமுமின்றி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை ஒவ்வொன்றாக ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

மேலும் அத்திரையரங்குகளில் மிகப்பெரிய பேனர்களை வைத்து அசத்தி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!