பேட்ட பொங்கலுக்கு ரிலீசாகும்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் பேட்ட. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்திற்கான புரோமோசன் வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பாடல் சிங் டிராக், போஸ்டர் என அவ்வப்போது வெளியிட்ட படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார் படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்ராஜ். அந்தவகையில் படத்தில் முதல் சிங்கிள் டிராக் பாடலை டிசம்பர் 3 ம் தேதி வெளியிடப்பட்டது. பாக்கத்தான போற காளியோட ஆட்டத்த என துவங்கும் இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடி உள்ளார். இப்பாடல் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படத்தின் 2வது பாடல் சிங் டிராக் நாளை (டிச.,07) வெளியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார். ஊலல்லலா… என இந்த பாடல் துவங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பாக பாடல் காட்சி ஒன்றில் ரஜினி ஆடுவது போன்ற போஸ்டர் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

Sharing is caring!