பேயாக மாறும் லைலா

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் உலகிற்கு வரும் லைலா ஆலிஸ் படத்தில் ஆவியாக நடிப்பார் என தெரிகிறது.

மிக பிரபலமான நடிகை லைலா.இவர் சூர்யா,அஜித், பிரசன்னாஉள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில்  கடைசியாக‌ வெளிவந்த படம் பரமசிவம். இந்த படத்தில் லைலா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு லைலா ஆலிஸ் திரைப்படம் மூலம் மீண்டும் த‌மிழ் சினிமா உலகிற்கு வர‌ உள்ளார்.ஆலிஸ் திரைப்படம் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாக உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் ரைசா நடிக்க உள்ள இப்படத்தை மணி சந்துரு இயக்குகிறார்.

மேலும் லைலா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க இருப்பதால் தனக்கான நல்ல ரோலில் நடிப்பார் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது . இந்நிலையில் ஆலிஸ் படத்தில் லைலா பேயாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!