பேய் பழி வாங்குகிறது என்பதை ஆராவாக மாற்றி ஜெயமோகன்

சென்னை:
பேய் பழி வாங்குகிறது என்று இருந்ததை “ஆரா” வாக மாற்றினார்களாம் 2.0 படக்குழுவினர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

2.0 இந்திய சினிமாவே தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றது. ஷங்கர் படத்தில் பயன்படுத்திய டெக்னாலஜி விஷயங்களை பாராட்டாதவர்கள் இல்லை.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் ஷங்கர் அக்‌ஷய் குமாரின் ஆவி பழி வாங்குகின்றது என்று தான் கதையில் எழுதியிருந்தாராம். இதை பார்த்த எழுத்தாளர் ஜெயமோகன் தான் கொஞ்சம் மாற்றம் செய்யலாம், பேய் எல்லாம் வேண்டாம்.

இன்றைய தலைமுறையை விஷயம் டச் செய்ய வேண்டும் என்று கூறி ‘ஆரா’ என்ற விஷயத்தை உள்ளே கொண்டு வந்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!