பைரவா படத்தில் நடித்த அபர்ணா ஹீரோயின் ஆனார்

சென்னை:
விஜய்யின் பைரவா படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா வினோத் இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

விஜய் நடித்த பைரவா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தவர் அபர்ணா வினோத். இதன் மூலம் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானார்.

இவர் தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். நடிகர் பரத்துக்கு ஜோடியாக இவர் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அம்மாவாக – ஸ்கூல் டீச்சராக நடிக்கிறாராம். டார்க் திரில்லராக உருவாகும் இந்த படத்தை சரண் குமார் இயக்கவுள்ளார். ஷூட்டிங் விரைவில் கொடைக்கானலில் துவங்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!