பொங்கலை முன்னிட்டு எத்தனையோ புதிய வெளியீடுகள் வந்துள்ளன

பொங்கல் தினத்தன்று எந்தப் புதுப் படங்களும் வெளியாகவில்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த சினிமா ரசிகர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு எத்தனையோ புதிய வெளியீடுகள் வந்துள்ளன.

புதிய படங்கள் வெளிவந்தால்தான் வெளியீடா, நிறைய டீசர், சில டிரைலர்கள், சிலபல மோஷன் போஸ்டர்கள் பொங்கலுக்காக வெளியிடப்பட்டுள்ளன. நிறைய வெளியீடுகளால் என்னென்ன வந்தது என்பது ரசிகர்களுக்கு ஒரு குழப்பமாகவே இருக்கும்.

அவை, எவையெவை எனப் பார்ப்போம்…

டீசர்கள்

பஞ்சாக்ஷரம்
தில்லுக்கு துட்டு 2
கடாரம் கொண்டான்
தாதா
கணேசா மீண்டும் சந்திப்போம்

டிரைலர்கள்

சார்லி சாப்ளின் 2
சிம்பா

முதல் பார்வை, மோஷன் போஸ்டர்கள்

இந்தியன் 2
ஆலிஸ்
உறியடி 2
ஜடா
கொம்பு வச்ச சிங்கமடா
உச்சகட்டம்
காஞ்சனா 3

பாடல்கள்

ஆர்வக் கோளாறு – நகரு..நகரு..
டைட்டானிக் – கொக்க மக்கா..
களவாணி – காரு போட்டு ஓடி வந்து…

இவை, இதுவரை வெளியிடப்பட்டுள்ளவை. இன்னும் சிலபல புதிய வெளியீடுகள் அடுத்தடுத்து இன்றும் நாளையும் வெளியாக உள்ளன.

பொங்கலுக்கு முன்பாகவே ‘பேட்ட, விஸ்வாசம்’ என இரண்டே இரண்டு படங்கள்தானே வந்தது என கவலைப்பட்டவர்கள், இந்த மற்ற வெளியீடுகளை, ஒரு முறை படித்து விட்டு மறக்காமல் சொல்லி, நீங்களும் சினிமா ரசிகர்தானா என சோதித்துப் பாருங்கள்.

Sharing is caring!