பொங்கல் தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஜினி – அஜித் ரசிகர்கள்

சென்னை:
ரஜினி, அஜித் ரசிகர்கள் பொங்கல் தினத்தை வெகுவாக எதிர்பார்த்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?

பொங்கலுக்கு முதன்முதலாக ரஜினியின் பேட்டயும் அஜித்தின் விஸ்வாசமும் மோத உள்ளன. இதனால் அத்தினத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.

ரஜினியின் பேட்ட படத்தின் அனைத்து ப்ரோமோஷன் வேலைகளும் படுவேகமாக பரபரப்பை ஏற்படுத்தி இன்று வெளியாக உள்ள டீசருடன் முடிய உள்ளன. ஆனால் விஸ்வாசம் தரப்பில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக்கே சமீபத்தில் தான் வெளியானது.

இதனால் பட ரிலீஸை கொஞ்சம் தள்ளி வைத்து கொள்ள முடியுமா என பேட்ட படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாகவும் அதற்கு சத்ய ஜோதி பிலிம்ஸ் விஸ்வாசம் கண்டிப்பாக பொங்கலுக்கு தான் என கூறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் ரஜினியின் எப்படத்திலும் இல்லாத புதிய விஷயமாக பேட்ட படத்தின் இசை வெளியீட்டில் பேட்ட இசைவெளியீடு என மட்டும் எழுதாமல் பேட்ட பொங்கலுக்கு பராக் என வித்தியாசமாக இசையினை வெளியிட்டு ரசிகர்களுக்கு மீண்டும் பட ரிலீஸ் தேதியை ஞாபகப்படுத்தியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!