பொன்னம்பலத்திற்கு பெரிய தண்டனை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று பொன்னம்பலம் தனிமைப்படுத்தப்படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 3 நாட்களாக ஐஸ்வர்யா சர்வாதிகாரம் நடந்தது. சர்வாதிகாரத்தின் உச்சத்திற்கே சென்ற ஐஸ்வர்யா, வீட்டில் இருப்பவர்களை தன்னால் முடிந்த வரை கொடுமை செய்தார்.

கடைசியாக ஐஸ்வர்யாவை பொன்னம்பலம் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதால், டாஸ்க் நேற்றோடு முடிந்தது. இதன் பின் தனியறையில் அமர்ந்திருந்த வைஷ்ணவி இன்று வீட்டிற்குள் செல்கிறார்.

இன்று வெளியாகி உள்ள முதல் பிரோமோவில் பொன்னம்பலம் வீட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். அதன் பின் பொன்னம்பலம் கார்டன் ஏரியவிற்கு தலையணை, படுக்கைகளை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

எதுக்கு இந்த முடிவுனு தெர்லயே! ????????#பிக்பாஸ்

எதுக்கு இந்த முடிவுனு தெர்லயே! ????????#பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss Vivo

Posted by Vijay Television on Thursday, August 2, 2018

பொன்னபம்பலத்திற்கு அளிக்கப்பட்டு இருக்கும் இந்த தண்டனை மிகவும் குறைவு தான் என்று வைஷ்ணவி கூறுகிறார். அவர் வயதுக்கு இது பேன்ற செயல்களை அவர் செய்திருக்க கூடாது என்று ஜனனியிடம் வைஷ்ணவி பேசிக்கொண்டு இருக்கிறார்.

கடந்த டாஸ்க்கின் இறுதியில் ஐஸ்வர்யாவின் கழுத்தை பிடித்து பொன்னம்பலம் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டதால் இந்த தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

Sharing is caring!