பொன் மாணிக்கவேல் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு… இன்று வருது

சென்னை:
இன்று முக்கிய அறிவிப்பு… வருது… வருது… பொன் மாணிக்கவேல் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வருது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பொன் மாணிக்கவேல் படக்குழுவினர் நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார்கள். சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் பிரபுதேவா போலீசாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என்று தலைப்பு வைத்து டைட்டில் லுக் போஸ்டரையும் சமீபத்தில் வெளியிட்டார்கள்.
இதில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். மேலும், முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!