பொறுப்பை மறக்கடித்த பசிக் கொடுமை… விக்னேஷ் சிவன் டுவிட்

சென்னை:
பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை, அவரை மன்னித்து விடுங்கள் என்று விக்னேஷ் சிவன் போட்டுள்ள டுவிட் செம பாராட்டுக்களை குவித்து வருகிறது.

விக்னேஷ் சிவன் ரசிகர்கள் அனைவராலும் அன்பான இயக்குனர் என்று அழைக்கப்படுபவர். இவர் அடுத்து சிவகார்த்திகேயனை இயக்கவுள்ளார், இந்நிலையில் ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலானது.

இதில் ஒரு டெலிவரி பாய் கஸ்டமருக்காக கொண்டு சென்ற உணவை அவரே எடுத்து சாப்பிட்டார். அப்போது யாரோ வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, விக்னேஷ் சிவன் ’பொறுப்பை மறக்கடித்த பசிக்கொடுமை, அவரை மன்னித்து விடுங்கள்’ என்று அவர் கூறியது எல்லோரிடமும் பாராட்டை பெற்று வருகின்றது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!