பொலிஸாக நடிக்கும் இனியா…!

கதாநாயகியை மையமாக கொண்ட படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இனியா, இவர் ஏற்கனவே, ‘வாகை சூடவா, ‘மெளனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘புலிவால்’,உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில்  ‘சாய் கிருஷ்ணா  இயக்கத்தில், ‘காஃபி’ எனப் பெயரிட்டுள்ள படத்தில், போலீஸ் ஆபீஸர் கேரக்டரில் நடித்துள்ளார் இனியா.

இந்த படம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகள் குறித்தான கதையை மையமாக கொண்டு உருவாகிறது.  இது தவிர, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் இனியா.

Sharing is caring!