“பொல்லாதவன் போல் இனி ஒரு படம் இயக்க மாட்டேன்”

சென்னை:
பொல்லாதவன் படம் போல் இனி ஒரு படம் இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

கமர்ஷியல் ஹிட் கொடுத்து சாதித்தவர்கள் பலர். இயக்குனர்கள் சிலர் கதையை மட்டும் நம்பி 2 வருடங்கள் கூட காத்திருப்பர்கள். அப்படி கதைக்காக எவ்வளவு கஷ்டம் என்றாலும் பரவாயில்லை என மெனக்கெடுத்து உழைப்பவர் வெற்றிமாறன்.

இவரது இயக்கத்தில் அடுத்து தனுஷ் நடித்துள்ள வட சென்னை படமட் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. இப்பட புரொமோஷனில் பேசும்போது, பொல்லாதவன் படம் போல் இனி ஒரு படம் இயக்கவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் வெற்றி மாறன். அந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றது. தனுஷிற்கும் அப்படம் ஒரு பெரிய இடத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!