பொள்ளாச்சி சம்பவம்…..சமந்தா அதிர்ச்சியான பதில்

பொள்ளாச்சியில் நடந்த பாலியில் கொடூரமானது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட 4 பேரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இருந்தாலும் இவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனை போதாது, அரபு நாடுகளில் கொடுக்கப்பட்ட கடுமையான தண்டனையை போன்று இங்கும் வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், பிரபலங்கலும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஒரு சில முன்னணி நடிகைகள் இதுகுறித்து வாய் திறக்காமல் இருந்து வந்தனர். இப்போது நடிகை சமந்தா இது குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய சமந்தா, இது மாதிரியான சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்கு தெரிந்த அந்த சம்பவம், நான் பேசுவதால் பல லட்சம் பேருக்கு தெரியும். ஆதலால் நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும். என்பதால் தான் அதை பற்றி நான் எதுவும் பேசவில்லை என்று கட்டுக்கதை கட்டியுள்ளார்.

Sharing is caring!