போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய பாலிவுட் நடிகர்

மும்பை:
நடிகராக இருந்தால் என்ன நானும் பொதுமக்களின் ஒருவன்தான் என்பது போல் நடிகர் ஜாக்கி ஷராப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய வீடியோ செம வைரலாகி வருகிறது.

சஞ்சய் தத்தின் பிராஸ்தனம் என்ற படத்தின் படப்பிடிப்பு லக்னோவின் பரபரப்பான பகுதியில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த ஜாக்கி ஷராப் அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை படப்பிடிப்பு குழுவினருடன் சேர்ந்து ஒழுங்கு படுத்தியுள்ளார்.

போக்குவரத்து சரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவை அவரே டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோதான் இப்போது செம வைரலாகி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!