போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நடிகை கைது

கொச்சி:
போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில், போதை பொருள் வைத்திருந்த, நடிகை அஸ்வதி பாபு (22) கைது செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் வார இறுதி நாளில் சினிமா நடிகர்கள் பங்கேற்கும் நள்ளிரவு, ‘பார்ட்டி’களில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாகவும், நடிகை ஒருவர் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும், போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கொச்சியில் போலீசார் நடத்திய சோதனையில், சினிமா மற்றும் ‘டிவி’ நடிகை அஸ்வதி பாபுவை, கார் டிரைவர் பினோய் ஆப்ரஹாமுடன், போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அஸ்வதி பாபு, டிரைவரின் உதவியுடன் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!