போஸ்டரால் சிக்கலில் சிக்கிக் கொண்ட ஹன்சிகா

சென்னை:
சிக்கலில் சிக்கிக் கொள்வாரோ ஹன்சிகா என்று கோலிவுட் அதிர்ந்து போய் உள்ளது. எதற்காக தெரியுங்களா?

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் படம் மகா. ஹீரோயினை மையமாக வைத்து எடுத்து வரும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி உடை அணிந்து தம்மடித்ததால் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் செகண்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா தலையில் முக்காடு போட்டு தொழுதபடி இருக்கிறார். பின்னால் மற்றொரு ஹன்சிகாவின் கையில் துப்பாக்கி உள்ளது.

இந்த போஸ்டரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சர்ச்சைக்காக  இவ்வாறு செய்யவில்லை என்றும், ஹன்சிகா ஏன் அப்படி வருகிறார் என்பது படத்தை பார்த்தால் புரியும் என்கிறார் தயாரிப்பாளர் மதியழகன்.

இருப்பினும் சிக்கலில் சிக்கி கொள்வாரோ ஹன்சிகா என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!