மகன் பெற்ற வெற்றி… சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மாதவன்

மும்பை:
தேசிய அளவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற தன் மகன் சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் மாதவன்.

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர்.
பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் அவர் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். அவரின் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான படம் விக்ரம் வேதா.

தற்போது அவர் விண்வெளி அறிஞர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இவரது மகன் தேசிய அளவில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று முதல் பரிசை தட்டிச்சென்றுள்ளார்.

மாதவன் அதனை புகைப்படத்துடன் பதிவிட ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தியுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!