மகளுக்கு நடிப்பு இப்போ வேண்டாம்… படிப்புதான் முக்கியம்… சேத்தன் ஜோடி முடிவு

சென்னை:
படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் மகள் தொடர்ந்து நடிக்க தடை போட்டுள்ளனர் தேவதர்ஷினி – சேத்தன் ஜோடி.

தேவதர்ஷினி – சேத்தன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் சமீபத்தில் 96 படத்தில் அறிமுகமான அவர்களது மகள் நியதி தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த தடை விதித்திருக்கிறார்கள்.

தேவதர்ஷினி – சேத்தன் இருவருமே தம்பதிகளாகவே டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்கள் வழியில் மகள் நியதியும் 96 படம் மூலம் நடிகையாகி இருக்கிறார். சிறுவயது வேடத்தில் நடித்தவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

தாம் தூம் படம் மூலம் அறிமுகமான சேத்தன் சமீபத்தில் வெளிவந்த தமிழ்படம் 2 படத்திலும் கலக்கி இருந்தார். களவு படத்திலும் நடித்திருந்தார். இதுபற்றி அவர் கூறும்போது ‘இயக்குநர் சி.எஸ்.அமுதனின் ரெண்டாவது படம் என்ற படத்திலும் நடித்தேன். எனக்கு காமெடியும் வரும் என்று கண்டு கொண்டவர். என் மனைவி தமிழ், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மகள் இப்போது 10ம் வகுப்பு படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

பிறகு பார்க்கலாம் என்று இருக்கிறோம். சினிமாவே குடும்பம். குடும்பமே சினிமா என்று இருக்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் பாரதிராஜா, சசிகுமாருடன் நடிக்கிறார் சேத்தன். சி.வி.குமார் தயாரிப்பில் இரண்டு படங்கள் உள்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!