’மகாமுனி’ டீசர்: மிரட்டும் ஆர்யா

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’மகாமுனி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் மகாமுனி திரைப்படத்தை இயக்கியுள்ளார். மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

‘மெளனகுரு’ என்ற வெற்றி படத்திற்கு பின்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்யாவை வைத்து சாந்தகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஆர்யாவின் கதாபாத்திரமும் இப்படத்தில் வித்தியாசமாக உள்ளது. டீசரிலேயே அது தெரிய வருகிறது. சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுக்காமல் தவித்து வரும் ஆர்யாவிற்கு, இப்படம் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ’நாமெல்லாம் மிருகமா இருந்தப்ப, உணவு, இனப்பெருக்கமும் தேவையா இருந்துச்சு, அதுல கொஞ்சம் மிருகங்க சிந்திக்க ஆரம்பிச்சிருச்சி, அப்படிப்பட்ட மிருகங்களுக்கு பின்னாளில் மனுஷனு பேரு வந்துச்சுனு’… என ட்ரெய்லர் தொடங்குகிறது. பேராசை, பொறாமை, போட்டி, வஞ்சகம் இவற்றால் மனிதன் நிம்மதியை இழந்தான் போன்ற வசனங்களும் ட்ரெய்லரில் இடம்பெறுகிறது.

‘மெளனகுரு’ திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவன் செய்யாத குற்றத்திற்காக, அதிகார பலத்தால், பணத்தாசை பிடித்த மனிதனால், தண்டனை அனுபவிப்பான். அதேபோன்றே, இப்படத்திலும், பேராசை, பொறாமை, போட்டி, வஞ்சகத்தால் மனிதன் என்னவெல்லம் செய்கின்றான் என்பதை இப்படத்தில் சொல்லப்படும் என்று டீசரில் தெரியவருகிறது.

டீசர் இதோ உங்கள் பார்வைக்காக…

Sharing is caring!