மகாவீர் கர்ணா… விக்ரம் நடிக்கும் படம் பூஜையுடன் தொடக்கம்

கேரளா:
தொடங்கியது… தொடங்கியது… விக்ரம் நடிக்கும் மகாவீர் கர்ணா பட்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாக இருக்கும் ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கேரளாவில் தொடங்கியது.

விக்ரம் நடிப்பில் ‘மகாவீர் கர்ணா’ என்ற பிரம்மாண்ட படமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினருடன் பிரபல நடிகர் சுரேஷ் கோபியும் , உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அடுத்தாண்டு டிசம்பரில் மஹாவீர் கர்ணா திரைப்படத்தை திரையிட இருக்கிறார்கள் படக்குழுவினர். அதோடு இந்தப் படத்திற்கு சர்வதேச தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டு விஎப்எக்ஸ்  பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!