மகிழ்ச்சியில் துள்ளி குதித்து நயன்தாரா

பல வருடங்களாக காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஆகிய இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு டூர் அடித்து அங்கு எடுத்துக்கொள்ளும் போட்டோக்களை இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், தற்போது பேக்மேன் ஸ்மாஷ் -என்ற விளையாட்டில் அவர்கள் ஈடுபட்டுள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் போட்டி போட்டு விளையாடுகிறார்கள். இறுதியில் நயன்தாராவிற்கு 1050 புள்ளிகளும், விக்னேஷ்சிவனுக்கு 760 புள்ளிகளும் கிடைக்கிறது. இதனால் விக்னேஷ்சிவனை வெற்றி கொண்ட மகிழ்ச்சியில் துள்ளி குதித்து நயன்தாரா ஆரவாரம் செய்வதும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

Sharing is caring!