மகேஷ்பாபு ரசிகர்கள் எரிச்சல்

நடிகர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் மகரிஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவின் 25வது படமாக உருவாகிவரும் இந்த படத்தை அவரது ரசிகர்கள் ஆவலோடு வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த படம் ஏப்ரல்-5ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை ஏப்ரல்-26ஆம் தேதி வெளியிடுவதாக ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளார்கள். கோடை விடுமுறையை மனதில் வைத்து அவர்கள் இதை மாற்றி உள்ளார்கள் என்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜூ கூறும்போது, ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ‘பரத் அனே நேனு’ மற்றும் ‘போக்கிரி’ ஆகிய படங்கள் இதேபோல ஏப்ரல் இறுதியில் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆகின. அதேபோல ஏப்ரல் இறுதியில் வெளியாகும் மகரிஷி படமும் சூப்பர் ஹிட் ஆகும் என கூறியுள்ளார். ஆனால் அவர் சொன்ன சப்பைக்கட்டு காரணம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும் எரிச்சலையுமே ஏற்படுத்தியுள்ளது

Sharing is caring!