மக்கள் செல்வனை சந்தித்த விளையாட்டு வீரர்

பிரபல நடிகர் விஜய்சேதுபதியை கிரிக்கெட் விளையாட்டு வீரர் விஜய் ஷங்கர் சந்திதுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஷங்கர் மக்கள் செல்வனை சந்தித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.

விஜய் ஷங்கர் வரவிருக்கும் ஐபிஎல் போட்டியில் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் விளையாட உள்ளார். ஏற்கனவே விஜய் ஷங்கர் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!