“மக்கள் செல்வி” ஆனார் வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள டேனி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவருக்கு மக்கள் செல்வி என்ற பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதுமுக இயக்குநர் சாந்தமூர்த்தி இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள திரைப்படம் டேனி. இதில் வரலட்சுமி போலீசாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, வேலராமமூர்த்தி, சயாஜி ஷிண்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரலட்சுமியின் பிறந்தநாளான இன்று வெளியானது.

இந்த போஸ்டரில் வரலட்சுமியின் பெயருக்கு முன்பு மக்கள் செல்வி என்ற பட்டம் இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வன் என்று நடிகர் விஜய் சேதுபதி அழைக்கப்படுகிறார். அந்தவகையில் தற்போது வரலட்சுமிக்கு இந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. வரலட்சுமி ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் பல உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!