மஞ்சு வாரியர் பதிலாக மம்தா மோகன்தாஸ்

மலையாள திரையுலகின் பிரபலமான கமர்ஷியல் பட இயக்குனராக விளங்கியவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படம் இயக்கி பழக்கப்பட்ட இவர், தற்போது ஒரு சிறிய நடிகரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான ஜோசப் என்கிற படத்தின் மூலம் பிரபலமான குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ் என்பவர் தான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவருக்கு, ஜோடியாக நடிக்க முதலில் மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் சில காரணங்களால் மஞ்சு வாரியர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். அதுமட்டுமல்ல, தான் விலகியதுடன், இந்த படத்தில் தனக்கு பதிலாக மம்தா மோகன்தாஸை நடிக்க வைக்குமாறு வலுக்கட்டாயமாக சிபாரிசு செய்து விட்டும் சென்றுள்ளாராம் மஞ்சு வாரியர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ள இந்த சமயத்தில் மஞ்சுவாரியரின் இந்த செயல் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sharing is caring!