மணிகர்னிகா டீசர் ரிலீஸ் -Teaser

வீரமங்கை ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாறு, மணிகர்னிகா என்ற பெயரில் பாலிவுட்டில் படமாக உருவாகி வருகிறது. கங்கனா ரணாவத், ஜான்சி ராணி வேடத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கு இயக்குநர் கிரிஷ் இயக்கி உள்ளார். பாகுபலி கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் வரலாற்று காவியமாக உருவாகி உள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்ட அரண்மனை, பாகுபலி படத்திற்கு இணையான சண்டைக்காட்சிகள் என மிரட்டும் இந்த டீசரில் கங்கனா, ஜான்சி ராணியாக தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசர் வெளியான 11 மணிநேரத்தில் யு-டியூப்பில் 48 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Sharing is caring!