மணிரத்னம் படத்தில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய்

செக்கச் சிவந்த வானம் படத்திற்குப் பிறகு மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையைத் தழுவி ஒரு படத்தை இயக்க உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. அந்தப் படத்தை அவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்க வேண்டும் என ஆர்வத்தில் இருக்கிறார். விஜய், மகேஷ் பாபு இருவரும் கூட அந்தப் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது.

ஆனாலும், அந்தத் திட்டம் மட்டும் தள்ளிக் கொண்டே போனது. மணிரத்னம் அடுத்து அந்த சரித்திரப் படத்தைத்தான் இயக்கப் போகிறார் என்று இப்போது மீண்டும் ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்தில் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் நடிப்பதற்காக அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடமும் பேசி வருவதாகத் தகவல்.

அமிதாப் இதுவரை தமிழ்ப் படத்தில் நடிக்கவில்லை. சமீபத்தில் தான் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து உயர்ந்த மனிதன் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. ஐஸ்வர்யா ராய், ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர், ராவணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Sharing is caring!