மதம் மாறிய நடிகை பிரியா.!!

எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது.

ஒருவேளை மதம் மாறிவிட்டாரா? என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து பிரியா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

‘அடிப்படையில் நான் இந்து. அதற்காக இந்து கடவுளை மட்டுமே கும்பிடுபவள் அல்ல. எனக்கு எம்மதமும் சம்மதம்தான். சர்ச்சுக்குப் போவேன், தர்காவுக்குப் போவேன். அதேபோல எனக்கு பிடித்த எல்லா கோயில்களுக்கும் போவேன். நம்மை மீறிய ஒரு சக்தி இந்த உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

மற்றபடி குறிப்பிட்ட ஒரு கடவுளின்மீது அதீத பக்தி எல்லாம் கிடையாது. இந்த வருடம் ரம்ஜான் நோன்பு ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை அதற்கான சாராம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறேன். நோன்பையும் என்னால் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிசெய்து கடைப்பிடித்து வருகிறேன். ஒரு மனிதனாய்ப் பிறந்தவன், முடிந்த அளவுக்கு மக்களின் நம்பிக்கைகளையும் மதித்து கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால்தான் இந்த முயற்சி’. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Sharing is caring!