மது ஒழிப்பு போராளி ஆகாஸ் நடித்துள்ள குடிமகன்

மது ஒழிப்பு  போராட்டங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “குடிமகன்”. இந்தப் படத்தில் ‘மது  ஒழிப்பு  இளம் போராளியான’ மாஸ்டர் ஆகாஷ்  நடித்துள்ளார். “குடிமகன்” திரைப்படத்தை இயக்குநர் சத்தீஷ்வரன், தயாரித்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாயகனாக தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன்  நடிகர் ஜெய்குமார்  மற்றும்  கதாநாயகியாக ‘ஈர நிலம்’  ஹீரோயின் ஜெனிஃபர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், பவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் உள்ளிட்டோரும் முக்கியமான  கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின், பாடல்களை பிக்பாஸ் புகழ் சினேகன் எழுதியுள்ளார். குடிமகன்  திரைப்படம் ஏப்ரல் 5 -ல் திரைக்கு வர உள்ளது.

Sharing is caring!